தமிழால் உலகாளும் நேரம்;
தமிழர்கள் உலகாளும் நேரம் வந்து விட்டது.
அரசினால் அங்கீகரிக்கபட்ட மொழிகளே ஆளும் திறன் அடையும் என்ற நிலை இன்று மாறிவிட்டது. அறிவியல் தொழில் நுட்பத்தை ஆளும் மொழியே உலகையும் ஆளும் என்பதை ஆங்கிலம் நிருபித்து விட்டது. தமிழ் மொழி இந்திய மொழியாக மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலான அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளிள் வாழும் மக்களின் மொழியாகத் திகழ்கிறது.
கணியத்தின் மூலம் தமிழால், உலகத் தமிழர் ஒரு குடும்பமாக இணையும் நாள் நெருங்கிவிட்டது. இனிமேல் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் சொல்வது போல் தமிழச்சாதி ஒரு குவலயக் குடும்பம் ஆகிறது.
ஏனென்றால் தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் இணையம் வழியாகத் தமிழிலே மின்னாடல் செய்யும் வசதி வரியுருமா மெல்லியத்தால் சாத்தியமாகிறது.
இன்னும் பல்வேறு ஆங்கிலத் தொழிற்கூடங்களாக அமைந்த பயன்பாட்டு மெல்லியங்களின் உள்ளும் தமிழன் தமிழோடு சென்று தமிழைத் தட்டச்சு செய்யும் மெல்லியமாக வரியுருமா மெல்லியம் ஓருலா எனும் மின் உலாப் பயன்பாட்டுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.
கணியத்தைப் பயன்படுத்த ஆங்கிலம் தேவை என்ற நிலை மாறி நேரடியாகத் தமிழிலேயே வரியுருமா மூலம் கணியப் பயன் பாட்டை எல்லோரும் அறிந்து கொள்ளமுடியும்.
நன்றி.
வணக்கம்!
|