தமிழ் மொழிக்கு அணிசெய்திட சங்க காலம், சங்கம் மருவிய காலம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக் காலம் என இலக்கியங்கள் காலம் தோறும் தோன்றியுள்ளன.
சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களைக் குறித்து
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்தபதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தேர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறந்த எட்டுத் தொகை"