For Artificial Intelligence A Model of Mind (1993) என்ற ஆய்வு நூலை வெளியிட்டு கணியத் துறையில் தன் ஆய்வினை முன்னெடுத்தார் இலயோலா கல்லூரியில் B.A பட்டப்படிப்பில் (1984-1987) தங்கப்பதக்கம் வென்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் M.A, M.Phil படிப்புகளில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று Grammar for Tamil Spell Checker என்ற தலைப்பில் Ph.D ஆய்வுச் சுருக்கம் (1995) சமர்ப்பித்த சி.கபிலன் அவர்கள்.
'இயல்யாப்பு (1993)', 'கணிப்பொறி வழி தமிழ் வினைகளின் பகுப்பாய்வு (1994)' (இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழக முதுநிலை பாடநூல்) என வளர்ந்த இவரின் ஆய்வுப் பணி 1999இல் கணியத் தமிழ்ச் சங்கம் என மலர்ந்து , பத்திரிக்கையாளர் மாநாட்டில் தங்களின் எதிர்காலத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.
கணியத்துறையில் தமிழை இயைபுபடுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய முன்மொழிவுகள் 'அறுசீர் மலர்ச்சி' என்ற பெயரில் இல.கணேசன் (B.J.P) அவர்களால் 2000இல் சென்னைக் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.
சி.கபிலன் அவர்களின் இந்த முயற்சிகளை வெளிப்படுத்துவதற்காக 'கணியத்தமிழ் சாஃப்ட்வேர் (பி) லிமிடெட்' நிறுவனம் 2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
கணியத்தமிழ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் முதல் வெளியீடாக சி.கபிலன் அவர்களின் வழிகாட்டுதலில் 'வரியுருமா' எனும் புரட்சிகரமான மெல்லியம் வெளியிடப்படுகிறது.
|