1. எழுத்துருக்கள்
இயல் வடிவாக்கத்திற்குப் பயன்படும் வகையில் பல்வேறு எழுத்துருக்கள், பெரிதும் பயன்படுத்தப்படும் டாப், டாம், டிஸ்கி, தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை போன்ற விசைக் கோலங்களில் வழங்கப்பட்டுள்ளன.
2. சீருருக்கள்
மின்னஞ்சல் செய்ய எளிதான யுனிக்கோட் வடிவ இயல் உருவாக்கத்திற்கு உதவும் வகையில் யுனிக்கோட் சீருருக்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் எல்லோருக்கும் புரியுமாறு இணையத்தளங்களைத் தமிழில் வடிவமைக்க இச்சீருருக்களைப் பயன்படுத்தலாம்.
3. வா.செ.கு எழுத்துருக்கள்
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும் ஒரு எழுத்துக் கூடக் குறையாது 39 குறியீடுகளைக் கொண்டு எழுத வழி செய்கிறது வா.செ.கு சீர்திருத்தம். இதனால் தமிழ் கற்பது எளிதாகும். இவ்வகையில் சீரமைக்கப்பட்ட பல எழுத்துருக்கள் வரியுருமாவுடன் இணைக்கபட்டுள்ளன.
|