கணினித் துறையில் தமிழ் மெல்லியத் தயாரிப்புகளில் சாதனை
படைத்து வரும் சி.கபிலன் அவர்களின் கணியத்தமிழ் சாஃப்ட்வேர்
நிறுவனம் 'கலைஞர் கவசம்' என்னும் இசைத்தொகுப்பை கின்னஸ்
உலக சாதனைக்காக தயாரித்து வருகிறது. தமிழக முதல்வர் கலைஞர்
கருணாநிதியின் பெருமையை விளக்கும் பாடல் 108 பாடகர்களால்
தமிழிசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி, கஜல், மேலைநாட்டு இசை,
நாட்டுப்புற இசை முதலிய 108 இசைவடிவங்களில் பாடப்பட்டு,
கின்னஸ் உலக சாதனை அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் உதவியாளர் திப்பு (எ) சை.சா. உஸ்மான்
இயற்றியுள்ள பாடலுக்கு கேரள அரசின் சிறந்த திரைப்பட
இசையமைப்பாளர் விருது பெற்ற வீ.தஷி இசையமைக்கிறார்.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 85ஆவது பிறந்த நாளான
ஜூன் 3ஆம் தேதியன்று கலைஞரின் துணைவியார் இராசாத்தி
அம்மாள் தமது இல்லத்தில் முதல் இசைத்தட்டை வௌ¤யிட்டு, உலக
சாதனை இசைத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்பு பாலம்
அமைப்பின் நிறுவனர் பாலம் கலியாணசுந்தரம் முதல் பிரதியைப்
பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய விருதுபெற்ற திரைப்பட இயக்குனர்
ஜெயபாரதி, இசையமைப்பாளர் வீ.தஷி, பாடல் ஆசிரியர்
சை.சா.உஸ்மான், கணியத்தமிழ் சாஃப்ட்வேர் அ.திவாகரன்,
ஜி.பாலன், திரைப்பட இயக்குனர் ரதன் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர்
சித்ரா சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
|