இயக்குனர் செய்தி


சி.கமலதாசன்

திருச்சிற்றம்பலம்.

தமிழ் இன்று சர்வேதேச மொழியாக உருமாறி உள்ளது. தமிழர்கள் இன்று பெரிய சமூகமாக திகழ்கின்றனர்.

ஆதலால் தமிழர்களிடையே முன்பு எப்பொழுதும் இருந்திராத ஓர் இணக்கமான உறவு வர்த்தக ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் உருவாகி உள்ளது. நாளுக்கு நாள் இந்த உறவு வளர்ந்தும் வருகிறது. எனவே தமிழர்களிடையே தகவல் பரிமாற்றத்தின் அவசியம் பெருகி கொண்டே வருகிறது. தகவல் பரிமாற்றம் செம்மையாக நிகழ, தகவல் விரைவாகவும் அதே நேரத்தில் முழுமையாகவும் பரிமாறப்பட வேண்டும். அதற்கு கணியத்தின் பயன்பாடும் அதனை இயக்க ஓர் செம்மையான மெல்லியத்தின் பயன்பாடு மிகவும் தேவை.

தமிழ் மெல்லியங்கள் பல இருந்தாலும் நாங்கள் தயாரித்துள்ள வரியுருமா என்ற மெல்லியத்திற்கு ஈடாக இதுவரை எந்த மெல்லியங்களும் இல்லை என்பதனைப் பெருமையுடன் குறிப்பிடுவோம். வரியுருமா உங்களை தமிழுடன் மின்னுலகில் எந்தவித சிரமும் இன்றி செவ்வனே உலா வரத் தோளோடு தோள் நிற்கும். வரியுருமா என்ற இந்த மெல்லியத்தைப் பயன்படுத்தி தாங்கள் அனைவரும் தகவல் பரிமாற்றத்திற்கு, தகவல் தொழில்நுட்பத்தின் முழுப் பயனையும் அனுபவிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மெல்லியம் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் திரு. ஜெயதேவன். தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவர் முனைவர். திரு. மா. இராசேந்திரன், இணையப் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி, முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் போன்ற தமிழ் அறிஞர்கள் பயன்படுத்தி வரும் மெல்லியம் ஆகும்.

மேலும் சென்னைப் பல்கலைக் கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறை, பத்திரிக்கை நிறுவனங்களும், பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும், தனி நபர்களும் இந்த வரியுருமா மெல்லியத்தை பயன்படுத்துகின்றனர் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.
வணக்கம்!© 2005 Kaniyatamil Software