இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு - ஜனவரி 16-31, 2006)


தட்டச்சு இயந்திரம் ஆங்கில விசைப் பலகையுடன் வெளிவந்தது. ஆங்கிலத்துக்கு மட்டுமே அது பயன்படும் என்று துவக்கத்தில் கருதியவர்கள் ஆங்கிலத்தில் குறைந்த எழுத்துக்களே உள்ளன எனக் காரணம் சொன்னார்கள்.

வாகங்கர் சகோதரர்கள் என இருவர். ஒருவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். பூமிக்கடியில் சரஸ்வதி ஓடுவதாக சொல்லப்பட்டபோது எந்த வழியாக ஓடுகிறது என்பதை ஆய்வு செய்தவர். அவரது மற்றொரு சகோதரர் எழுத்தாராய்ச்சி நிபுணர். அவர் ஹிந்தி எழுத்துக்களை தட்டச்சு விசைப் பலகைக்குப் பொருத்தமாக மாற்ற முடியும் என ஆய்வு செய்தவர்.

தனது திட்டத்தை கோத்ரெஜ் நிறுவனத்துக்குத் தந்து அதன் காரணமாக ஹிந்தியில் விசைப்பலகை வந்தது. ஹிந்தியில் முடியுமானால் ஏன் தமிழில் முடியாது, தெலுங்கிலும், மலையாளத்திலும் எல்லா மொழியிலும் முடியும் என்று ஆராய்ந்து வெற்றி கண்டனர். தற்போது தட்டச்சு விசைப் பலகை தமிழில் வந்து விட்டது.

கணினியைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் திரு.சி.கபிலன் அவர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கான துவக்கம் அறுசீர் மலர்ச்சி என்ற பெயரில் 2000 ஆண்டு நடைபெற்றது.

கணினியின் ஒவ்வொரு கருவியிலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தினால் மட்டுமே நாம் விரும்பும் தமிழ் எழுத்து கிடைக்கும். ஒரு கணினியில் பழகியவர் மற்றொரு கணினியை இயக்கி தமிழ் எழுத்துக்களைப் பெறச் சிறிது சிரமப்பட வேண்டும்.

இதற்காக ஒரு பொது வடிவம் உருவாக்கி வெளியிடப்பட்டிருந்தாலும் அதுவே பொதுவானது என அனைவரும் இன்னும் ஏற்கவில்லை.

இந்த நிலையில் எந்தக் கணினி இயந்திரத்திலும் எந்தக் கணினி விசைப்பலகைகளிலும் நாம் விரும்பிய தமிழ் வடிவத்தைப் பெற முடியும் என ஆராய்ந்து 'வரியுருமா'வினை வடிவமைத்துள்ளார் திரு.சி.கபிலன் அதற்காக அவருக்கும் எனது பாராட்டுக்கள்.

 


© 2006 Kaniyatamil Software