தமிழ் இலக்கணம் படிக்க ஒரு சாப்ட்வேர்!
'வரியுருமா -எழுத்துக்களை சுமந்து செல்லும் குதிரை ',கம்பீரமாக ஒலிக்கிறது சி.கபிலனின் குரல். 'கணியத்தமிழ் 'எனும் சாப்ட்வேர் நிறுவனத்தின் சேர்மேன் . தமிழ் மென்பொருள்களை பயன்படுத்துவதில் இனிமேல் அதிக சிக்கல்கள் இருக்காது என்கிறார் இவர்.
இவரது 'வரியுருமா' என்ற சாப்ட்வேர் மூலமாக என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்காக , இந்த பதில். 'வரியுருமா'வில்
பார்க்கா,சேர்க்கா, கடிதா, வடிவா, மாற்றா, சேர்க்கா என்று ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு பயனைத்தருகின்றன. 'பார்க்கா'-
நம்மிடம் இல்லாத Font(எழுத்துரு)ல் அமைந்த மின்னஞ்சலையோ,
பைலையோ எளிதில் படிக்க உதவும். 'சேர்க்கா' - புதிதாக ஒரு Font கண்டுபிடிக்கப்படும்போது, அதனை இதன் மூலமாக சேர்த்துக் -
கொள்ளலாம். 'மாற்றா' - எந்த எழுத்துருவாக இருந்தாலும், நாம் விரும்பும் எழுத்துரு வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
'ஓருலா' மூலமாக, விண்டோஸ் முறையில் இயங்கும் எந்த ப்ரோக்கிராமிலும் நாம் தமிழை எளிதில் டைப் செய்யலாம்.
கீபோர்டில் இருக்கும் எழுத்து வகைகளை, நம் வசதிக்குத் தகுந்தவாறு மாற்றுவது போன்ற பல வசதிகள் இதில் உள்ளன.
''இங்கும் வெளிநாட்டிலும், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது தமிழ் இலக்கணத்தை இளைஞர்கள் எளிதாக கற்கும் வகையில், ஒரு சாப்ட்வேரை தயாரித்து வருகிறோம். இதன் மூலமாக, இலக்கண சுத்தமாக தமிழ் கோப்புகளை உருவாக்க முடியும்'' என்கிறார் கபிலன். ஆங்கிலம் சார்ந்த மொழிகளை மட்டுமே கம்ப்யூட்டரில் எளிதாக பயன்படுத்த முடியும். என்ற நிலையை மாற்றிக் காட்டவே இந்த முயற்சி .
இதனால் வெவ்வேறு எழுத்துரு மற்றும் இ-மெயில், சாட்டிங்கில்
தமிழின் பயன் வெகுவாக அதிகரிக்கும் என்கிறார் கபிலன்.
தமிழ் டைப் செய்யத்தெரியாதவர்களும் இந்த 'வரியுருமா' வை
பயன் படுத்தலாம். அதோடு, நாம் விரும்பும். விதத்தில் கீபோர்டு ஆபரேஷனை மாற்றவும் செய்யலாம். 'சுத்ந்திரத்தை ஏற்படுத்தக் கூடிய கருவி, கம்ப்யூட்டர் அதில் கட்டுப்பாடுகளோ, சிக்கள்களோ இருக்கக்கூடாது' என்கிறார்கள் கணியத்தமிழ் நிறுவனத்தினர்கள். இதன் மூலமாக, பத்திரிகைத்துறை, தமிழ் படைப்புகளை பதிப்பிக்கும் நிறுவனம் மட்டுமல்லாமல் ,தமிழின் மீது ஆர்வமுள்ள எவரும் பயனடைய முடியும்.
கம்ப்யூட்டரில் தமிழின் பயன்பாட்டை எளிதாக்கும் வழியை தொடங்கி வைத்திருக்கும் இந்த 'வரியுருமா' சாப்ட்வேரின் விலை 9 ஆயிரம் ரூபா தான் . ''இது வெளி நாடுகளில் விற்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகை. இங்குள்ளவர்கள் இதன் பயனை உணரும் போது, மேலும் குறையும்'' என்று சொல்லியவாறே சன்னமாக சிரிக்கிறார் கபிலன். |