தமிழிலும் 'சாட்டிங்' செய்யலாம்..!
இன்றைய கணினி உலகில் தமிழனின் கொடி உயரப் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால். அந்தளவுக்கு தமிழின் கொடி உயர பறக்கிறதா? என்றால், 'இல்லை' என்ற பதில்தான் வரும்.
இதற்குக் காரணங்களும் நிறையவே இருக்கின்றன. தமிழக அரசு உட்பட, பல தனியார் அமைப்புகளும் விதவிதமான எழுத்துருக்களை(Fonts) வெளியிட்டிருக்கின்றனர். நடைமுறையில் விதவிதமான விசைப் பலகைகளும்(Key-board) நம்மிடையே புழக்கத்தில் உள்ளன.
கணினியில் ஆங்கில மொழியைப் பயன்படுத்தி மின்னஞ்சல், மின்னாடல் (chatting), மின் ஆளுகை (e-governance), மின் பதிப்பு போன்ற பல விஷயங்களும் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வேலைகளையெல்லாம் தமிழில் செய்வதற்க்கு மட்டும் ஏன் தடை? என்ற கேள்வி எழும். இது தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள குறை அல்ல கணினியில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தாத் எல்லா மொழிகளுக்கும் உள்ள குறை.
கணிப்பொறியில் புழங்கும் உலக மொழிகள் ஒவ்வொன்றுக்கும், உலக அளவிலான பயன்பாடுப் பொதுத் தன்மையை வகுத்தளித்து. சீரமைத்து வரும் பன்னாட்டு அமைப்பு தான் 'யுனிக்கோட் கன்சோர்ட்டியம், 'இந்த யூனிகோட் தரத்தை நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துரு பெற்றிருந்தால்தான், உலக அளவில் ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தி செய்யப்படும் எந்த வேலைகளையும் நம்மால் தமிழிலும் செய்யமுடியும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துரு எதுவாக இருந்தாலும் அதை யூனிகோட் தரத்தில் அமைந்துள்ள எழுத்துருவாக மாற்றித் தரும் மென்பொருள் ஒன்று இது வரை கண்டுபிடிக்கப் படாமல் இருந்தது இந்த கனவை, தன்னுடைய பல்லாண்டுகால ஆராய்ச்சியின் பலனாக நனவாக்கி இருக்கிறார் ,'கணியத்தமிழ் சாப்ட்வேர் நிறுவனத்தின்' இயக்குனர் சி.கபிலன். இவரின் வழிகாட்டுதலோடுவடிவமைக்கப் பட்டிருக்கும் மென்பொருள் தான் 'வரியுருமா'.இதன் சிறப்புகளைப் பற்றி சி.கபிலன் நம்மிடம் பேசியதிலிருந்து...
''மூன்றாவது உலகமாக இன்றைக்குக் கருதப்படும் மின்னுலகத்தோடு தமிழை எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் இணைக்கும் பாலம் தான் 'வரியுருமா' மென்பொருள் .இந்த மென்பொருளில் கடிதா, வடிவா, சேர்க்கா, மாற்றா, பார்க்கா, ஓருலா-என ஆறுவிதமான செயல்முறைகள் உள்ளன. நீங்கள் எந்த வகையானவிசைப் பலகை ஒழுங்கைக் கொண்டிருந்தாலும், எந்த வகையான எழுத்துருவைக் கொண்டிருந்தாலும் தற்ப்போது பயன்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் மென்பொருள்களில் தமிழைக் கொண்டு செல்லலாம் என்பதுதான் வரியுருமா மென்பொருளின் சிறப்பு. டாக்டர் வா.செ.குழந்தைசாமி சீரமைத்த வரிவடிவங்களில் அமைந்த எழுத்துருக்கள் பல வற்றையும் சேர்த்து, வரியுருமா பேக்கேஜாக 9,000 ரூபாய்க்குத் தருகிறோம். நெட்-ஒர்க்குக்கு ஓர் இணைபுக்கு ரூபாய்4500-க்குத் தருகிறோம். இனி,செயல் முறைகளைப் பற்றிச் சொல்கிறேன்.
சேர்க்கா
உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியாது. ஆங்கில தட்டச்சுதான் பழக்கம் என்றாலும் கவலை இல்லை. நீங்கள் விரும்பும் எழுத்துருவையும், விசைப் பலகை ஒழுங்கையும் வரியுருமாவில் இணைக்க வழி செய்கிறது சேர்க்கா.புதிய விசைக்கோல (Key-board Lay-out) ஒழுங்குகளைப் பயன்படுத்துபவர்களே வடிவமைக்க வழிகாட்டுகிறது.எழுத்துரு சேர்க்கா என்னும் 'டூலைப்'
பயன்படுத்தி வரியுருமாவில் இணைக்கப்படாத.இனிவரும் காலத்தில் வடிவமைக்கப்படும் எழுத்துருக்களையும் இணைக்கப்படும்.
பார்க்கா.
படிக்க முடியாத வடிவில் கணினித்திரையில் தோன்றும் தமிழ்
டெக்ஸ்ட்டைப் படிப்பதற்க்கு ஏற்றவாறு மாற்றித்தருகிறது பார்க்கா.
மாற்றா.
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டு
நமக்கு வரும் செய்தியை. நாம் விரும்பும் வேறு பல எழுத்துருக்களுக்கு மாற்றித்தருகிறது மாற்றா.
கடிதா.
ஆங்கிலம், த்மிழ் என இரண்டு மொழியும் உள்ளடக்கிய செய்தியைக் கூட யூனிக்கோட் வழியில் மின்னஞ்சல் செய்வதற்க்கு ஏற்றவகையில் இந்த பிரிவில் தட்டச்சு செய்து கொள்ளலாம்.
வடிவா.
எந்த எழுத்துரு வடிவத்தில் உங்களுக்கு செய்தி வந்தாலும். அதன் வடிவத்தை யூனிகோட் வசதியுள்ள எழுத்துருவுக்கு மாற்றுவதற்க்கு முடியும். மறுபடியும் அதைதட்டச்சு செய்யும் வேலை மிச்சமாகும்.
ஓருலா
பயன்பாட்டில் இருக்கும் முன்னனி நிறுவனங்களின் எந்த மெல்லியத்திலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தி ,ஈ-மெயில்,சாட்டிங்
செய்வதுபோல் ,வரியுருமாவைப் பயன்படுத்தி தமிழிலும் செய்யலாம்.''
-நீண்ட விளக்கம் தந்த கபிலனிடம்.''உங்களுக்கே புதிதான சாப்ட்வேரில் வரியுருமாவைப் பயன்படுத்திய அனுபவத்தைக்
கூறமுடியுமா?''என்றோம்.
''சென்னைப் பல்கலைகழகத்தின் தமிழ்த்துறையில் வரியுருமா
மென்பொருளைப் பயன்படுத்திதான் Lexicon development என்னும்
ஆய்வுப்பணியைச் செய்கின்றனர் .
ஆங்கிலம் தவிர இணைய பயன்பாட்டில் யுனிக்கோட் பிரச்சினையால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மொழிகளின் பட்டியலில் இருந்து ,தமிழை வரியுருமா மெல்லியத்தின் மூலம் விடுவித்துள்ளோம் . எங்களின் தொழில் நுட்ப அறிவோடு, மொழியில் புலமைமிகுந்த அறிஞர்களின் துணையோடு எந்த மொழிக்கும் வரியுருமாவைக் கொண்டுதமிழுக்கு கிடைதிருக்கும் அங்கீகாரத்தை அளிக்க முடியும்''.
''எல்லாம் சரி...அது என்னங்க வரியுருமான்னு பெயர்?''
''மா என்றால் குதிரைன்னு அர்த்தம். எழுத்துருக்களைச் சுமந்து செல்லும் குதிரைன்னு பொருள் அளிக்கும்படியாக 'வரியுருமா'
என்று பெயர் வைத்துள்ளோம்''.
-சரியான குதிரைதான்!
|