கம்யூட்டரில் தமிழ் :தடைகளை விலக்கும் வரியுருமா
கம்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வந்தபோதும் தமிழ் மக்களிடம் சரியாக போய்ச் சேராததற்க்குக் காரணம் மொழிச் சிக்கல்தான் .மக்களுக்குத் தெரிந்ததாக, எளிதாகப் புரிந்துக்கொள்ளக் கூடியதாக,தமிழ் மொழியில் கையாலக்கூடியதாக கம்ப்யூட்டர்- மாறவில்லை.இதனால் பெரும்பாலான மக்களிடமிருந்து சற்று விலகியே கணிப்பொறி இருக்கிறது.
அடுத்து,சாஃப்ட்வேர்கள். ஏற்கெனவே கம்யூட்டரில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சாஃவேர்களை தமிழ் மொழிக்கென மீண்டும் உருவாக்க வேண்டிய சுமை. இக்காரணங்களால் சாஃப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டின் விரிவான பரப்பு தமிழ் சூழ்நிலையில் சுருங்கிவிடுகிறது .இவற்றையெல்லாம் கவணத்தில் கொண்டே தடையின்றி கம்யூட்டரில் தமிழைப் பயன்படுத்தவும் தமிழோடு மின் உலகில் தடையின்றி உலாவரவும் உதவக் கூடியத்தமிழ் லிங்குவாஃபார்ம் (Tamil Linguaform)என்ற தமிழ் மொழித்தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம் ,என்கிறார் கணியத்தமிழ் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிட்டெடின் சேர்மேன் திரு.கபிலன் அவர்கள்.
தமிழில் தட்டச்சு செய்வதெற்கென கணிப்பொறியில் இதுவரை பயன்படுத்தி வரும் எழுத்துரு கீ போர்டு லே அவுட் அனைத்தும் வெவ்வேறானவை . ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்ததை , இன்னொரு எழுத்த்ருவுக்கு மாற்ற முடியாது.ஒரு கீபோர்டு லே அவுட்டிற்கு பழகியவர்கள் இன்னொரு கீ போர்டு முறைக்கு மாறுவது என்றால் புதிதாக பழகுவது போல் பழகிட வேண்டும் . இதனால் இந்த விசைப் பலகையை (கீ போர்டு லே அவுட்)தரப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன . அவையும் வெற்றி பெறவில்லை. இப்படி கணிப்பொறியில் எழுத்துரு ,விசைப்பலகை உட்பட தமிழைப் பயன்படுத்துவதில் உள்ள அடிப்படைச் சிக்கல்களுக்கு முர்றுப்புள்ளி வைக்கிற்து வரியுருமா சாஃப்ட்வேர் . இந்த சாஃப்ட்வேரை கம்ப்யூட்டரில் நிறுவினால்(install) போதும் .
நாம் பழகிய கீ போர்டில், விரும்பிய எழுத்துருவில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். எந்த எழுத்துருவில் இருந்தாலும் இருந்தாலும் கவலையில்லை. விரும்பிய எழுத்துருவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
அடுத்து,நமக்கு வருகிற இ மெயில் படிக்க முடியாத வடிவத்தில் இருந்து தொல்லை செய்யும். இந்த இமெயில்கள் எந்த எழுத்துருவில் டைப் செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து எளிதில் படித்துக்கொள்ளலாம். விருப்பம்போல இமெயில் அனுப்புவதற்காக யுனிகோட் வடிவத்தில் டைப் செய்வதற்கான எழுத்துருக்களும் உள்ளன. எந்த எழுத்துருவையும (font) இந்தயுனிகோட் வடிவத்திற்கு மாற்ற முடியும்.
இதுவரை வெளியான எழுத்துருக்கள் மட்டுமல்ல இனி வரப்போகும் எழுத்த்ருக்களையும் இதனுள் இணைத்துக்கொள்ளலாம்.
இணையத்தளங்கள் (வெப்சைட்)வடிவமைக்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு எழுத்துருவைப் பயன்படுத்துவதால் அவற்றை Downloadசெய்தால்தான் படிக்கமுடியும் . அந்த சிக்கல் இல்லாமல் யுனிகோட் வடிவில் HTML லில் வெப்சைட்டுகளை வடிவமைக்கும் வசதியும் உள்ளது. எம்.எஸ்.ஆபிஸ் (M.S.office) மென்பொருள்களில் தடையின்றிப் பயன்படுத்தலாம். குறிப்பாக எம்.எஸ்.ஆபிஸ்களில் ஆங்கிலப் பயன்பாட்டின் போது அகர வரிசைக்கு மாற்றுவதுபோல் தமிழ் பயன்பாட்டின் போதும் அகரவரிசையில்(alphabetic) எளிதாக மாற்றலாம் இதுவரை வெளிவந்த கீபோர்டு முறைகள் பலவற்றை இவ்வாறு பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
''சுருக்கமாக சொன்னால்''
1.ஒரு எழுத்துருவில் (font)தட்டச்சு செய்ததை விரும்பியே,தொடர்பே இல்லாத வேறொரு எழுத்துருவுக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
2.எந்த கீ போர்டு முறையிலும் தட்டச்சு செய்யலாம் .புதிதாக கீபோர்டு
ஒன்றையும் உருவாக்கி கொள்ளலாம்.
3.சுதந்திரமாக இ மெயில் அனுப்பலாம். அதேபோல் நமக்கு வந்த இ மெயில்களைப் படிப்பதற்கு அவர்களின் எழுத்துரு இல்லையே என்ற கவலை இல்லாமல், எழுத்துருவை புரியும் வடிவில் மாற்றி எளிதாக படிக்கலாம் .
4.அப்ளிகேஷன் சாஃப்ட்வேர்களான பேஜ்மேக்கர், போட்டோ ஷாப்,
இல்லஸ்டிரேட்டர், கோரல்டிரா,ஃப்ளாஷ்.எம்.எஸ்.ஆபிஸ்,மெசஞ்சர்,
புரவ்சர் எனப் பலவற்றிலும் தடையின்றி ஆங்கிலம் போல் தமிழை
எளிதாக பயன்படுத்தலாம்.
வரியுருமா இருந்தால் போதும்,தமிழோடு மின்வெளியில்(E-World) உலா வரலாம்'' இதற்கு வரியுருமா சாஃப்ட்வேரை வாங்கி உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவிக்கொண்டால் போதும். என்கிறார் திரு.சி.கபிலன்.
|