வரியுருமாப் பயனகம்
|
யுனிக்கோட் பயன்பாடு |
| பார்க்கா |
படிக்க முடியாத வடிவில் கணித்திரையில் தோன்றும் தமிழ் இயலை படிப்பதற்கு ஏற்றவாறு மாற்றித் தருகிறது பார்க்கா. கணியத்தில் இல்லாத எழுத்துருவில் இயல் அமைந்திருந்தாலும் யுனிக்கோட் சீருருவில் படிக்குமாறு வெளிப்படுத்துகிறது. |
| மாற்றா |
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயலை நாம் விரும்பும் வேறு எழுத்துருவிலோ அல்லது யுனிக்கோட் சீருருவிலோ மாற்றித் தருகிறது மாற்றா. |
| கடிதா |
யுனிக்கோட் சீருருக்களை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்வதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வரியுருமாவின் பயன்பாட்டு மெல்லியமே கடிதா. ஒரு பொது வடிவமைவு யுனிக்கோட் சீருருக்களுக்கு உண்டு என்பதால் அதனைப் பயன்படுத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் தமிழால் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதே இம்மெல்லியமாகும். |
| ஓருலா |
பயனாளர் எந்த ஒரு யுனிக்கோட் இயைபுள்ள பயன்பாட்டு மெல்லியத்திலும் நேரடியாக யுனிக்கோட் சீருருக்களில் தட்டச்சு செய்ய ஓருலா பயன்படுகிறது. |
| சேர்க்கா |
சேர்க்காவில் உள்ள விசை சேர்க்காவை பயன்படுத்தி நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் விசை ஒழுங்கிலேயே யுனிக்கோட் சீருருக்களை பயன்படுத்த வழி செய்கிறது. |
| யுனிக்கோட் சீருருக்கள் |
வரியுருமாவுடன் வெவ்வேறு வடிவிலான யுனிக்கோட் சீருருக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. |