| |
செயற்பாடுகள் |
இதுவரை தமிழ் மெல்லியங்களில் |
வரியுருமாவில் |
| 1. |
பயன்பாட்டியங்கள்
Application |
எழுத்துருத்தேர்வு மற்றும் விசைப்பலகைத் தேர்வு என ஓரிரு பயன்பாட்டியங்கள் மட்டுமே காணப்படும். |
மாற்றா, பார்க்கா, கடிதா, வடிவா, ஓருலா எனப்பல பயன்பாட்டியங்களைக் கொண்டுள்ளது. |
| 2. |
பயன்படுத்தலியம்
Utility |
பயனாளர் விரும்பியபடி மாற்றி வடிவமைத்துப் பயன்படுத்தும் வசதி பெரிதும் வழங்கப்படவில்லை. |
புதிய எழுத்துருக்களைச் சேர்க்கவும் விரும்பிய ஒழுங்கில் விசைப்பலகையை வடிவமைக்கவும் சேர்க்கா எனும் பயன்படுத்தலியம் காணப்படுகிறது. |
| 3. |
பயன்படுகளம்
Platform |
குறிப்பிட்ட மெல்லிய வடிவமைப்பாளர் தயாரித்த களங்களில் அல்லது எம்.எஸ்.ஆபிஸ் போன்ற ஓரிரு களங்களில் பயன்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கும். |
வரியுருமா வழங்கும் களங்களில் மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் தொழிற்படும் அனைத்துப் பயன்பாட்டு மெல்லியங்களிலும் தமிழைத் தட்டச்சு செய்ய வழிகாட்டுகிறது. |
| 4. |
எழுத்துருக்கள்
Fonts |
ஒவ்வொரு எழுத்துருவையும் அதற்கென வழங்கப்பட்ட விசைப்பலகை ஒழுங்குகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்யலாம். |
வரியுருமாவுடன் வழங்கிய மற்றும் வழங்கப்படாத எல்லா தமிழ் எழுத்துருக்களையும் நீங்கள் விரும்பிய விசைப்பலகை ஒழுங்கைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்யலாம். |
| 5. |
விசைப்பலகை
Keyboard |
குறிப்பிட்ட எழுத்துருவை அதற்கென வடிவமைத்த விசைப்பலகை ஒழுங்கைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்யலாம். |
உங்கள் விசைப்பலகை ஒழுங்கை நீங்கள் விரும்பியவாறே வடிவமைத்து அந்த விசைப்பலகை ஒழுங்கில் எல்லாத் தமிழ் எழுத்துருக்களையும் தட்டச்சு செய்யலாம். |
| 6. |
யுனிக்கோட்
Unicode |
யுனிக்கோட் வடிவில் தட்டச்சு செய்வதற்கென வழங்கப்பட்ட எழுத்துருக்களைப் பயன்படுத்தி யுனிக்கோட் வடிவில் தட்டச்சு செய்யலாம். |
1. எந்த எழுத்துருவிலும் தட்டச்சு செய்து யுனிகோட் வடிவில் மாற்றி அமைக்கலாம்.
2.யுனிக்கோட் வடிவில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் அனுப்புவதற்கு என்று பிரத்தியேகமாகக் கடிதா எனும் பயன்பாட்டியம் வழங்கப்பட்டுள்ளது.
3. பிற பயன்பாட்டு மெல்லியங்களுக்கு உள்ளும் சென்று ஓருலாவைப் பயன்படுத்தித் தமிழைத் தட்டச்சு செய்யும்போது யுனிக்கோட் சீருவில் தட்டச்சு செய்யலாம். இதனால் வரியுருமா யுனிக்கோட் பயன்பாட்டைத் தமிழில் பரவலாக்குகிறது. |
| 7. |
மின்னாடல்
Chatting |
ஏதாவது ஒரு சொன்னிகழ் மெல்லியத்தில் தட்டச்சு செய்ததை பிரதி செய்து ஒட்டி, தமிழில் மின்னாடல் செய்யலாம். |
நேரடியாக மின்னாடல் தளத்தில் தமிழில் தட்டச்சு செய்து பேசலாம். |
| |
மின்னஞ்சல்
அனுப்புநர் நிலை |
மின்னஞ்சல்
பெறுநர் நிலை |
வரியுருமா
பயன்படுத்துவோர் நிலை |
| 8. |
ஏதோ ஓர் எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்புவது |
இந்தக் கடிதத்தை அதே எழுத்துரு இல்லாவிட்டால் இவரால் படிக்க முடியாது. தன்னிடம் உள்ள எழுத்துருக்களோடு மின்னஞ்சல் ஒத்துவருகிறதா என ஒவ்வொரு எழுத்துருவாக ஒப்பிட்டு முயலலாம். |
பார்க்கா மூலம் தன்னிடம் உள்ள எழுத்துருவிலும் அவ்வாறு இல்லாவிட்டால் யுனிக்கோட் வடிவிலும் கடிதத்தைப் படிக்கலாம். |
| 9. |
பயன்படுத்திய தமிழ் எழுத்துருவையும் இணைத்து அனுப்புவது |
கடிதத்தோடு வந்த எழுத்துருவைப் பதிவிறக்கம் (Download) செய்து கடிதத்தைப் படிக்கலாம். |
எழுத்துரு இல்லாமலே எந்தக் கடிதத்தையும் பார்க்கா மூலம் படிக்கலாம் என்பதால் எழுத்துருவை அனுப்பத் தேவையில்லை. |
| 10. |
தட்டச்சு செய்த கடிதத்தை Pdf வடிவில் மாற்றி அனுப்புவது |
Adobe Reader இருந்தால் எந்தச் சிக்கலும் இல்லாமல் படிக்கலாம். |
வரியுருமா இருந்தால் Pdf வடிவில் சேமித்தும் அனுப்பலாம். மற்றும், Pdf வடிவில் வரும் கடிதத்தை வரியுருமாவுடன் இணைக்கப்பட்ட Adobe Reader மூலம் படிக்கவும் செய்யலாம். |
| 11. |
யுனிக்கோட் சீருருவில் தட்டச்சு செய்து அனுப்புவது. |
யுனிக்கோட் சீருரு இணைப்பு இல்லாத சில அஞ்சல் தளங்களில் அனுப்பினாலும் யுனிக்கோட் இயைபு இல்லாத இயங்குதளம் பயன்படுத்தினாலும் படிக்க முடியாது. மற்றைய சந்தர்ப்பங்களிலும் படிக்கலாம். |
யுனிக்கோட் வடிவில் வரும் அஞ்சலை எந்தச் சிக்கலும் இல்லாமல் எல்லோரும் படிக்கலாம். யுனிக்கோட் இயைபு இல்லா மின்னஞ்சல் தளங்களில் வரும் அஞ்சல்களையும் பார்க்கா மூலம் படிக்கும் வடிவில் மாற்றிப் படிக்கலாம். |
| 12. |
கடிதத்தை ஏதேனும் ஒரு சொன்னிகழ் மெல்லியத்தில் தட்டச்சு செய்து பின் பிரதி செய்து அஞ்சல் தளத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும். |
|
நேரடியாக மின்னஞ்சல் தளத்திலேயே தமிழில் கடிதத்தை தட்டச்சு செய்யலாம்.
|