வரியுருமா

தமிழில் முதன்முதலாக வெளியாகும் தமிழ் மொழித்தளம்


கணியப் பயன்பாட்டில் - ஆங்கிலம் சாரா மொழிகள்

ஆங்கிலம் சாரா மொழிகளைப் பொறுத்த வரையில் அவை கணியப் பயன்பாட்டில் தமக்கென ஒரு வழியை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது, இந்த வழி அம்மொழியின் தன்மையையும் பன்முகமான படைப்பாற்றலையும் பேணக்கூடியதாக அமைவது அவசியம்.

அதேசமயம் கணியத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு மெல்லியங்கள் முதலான தொழில்நுட்பங்களையும் தம் மொழிக்கேற்ப மீண்டும் நாமே உருவாக்க வேண்டும் என்ற ஒர் மறுபதிப்புச் சுமையை ஏற்றுவதாகவும் தொழில்நுட்பப் பயன்பாட்டின் அகலத்தைக் குறைப்பதாகவும் அமைந்துவிடக் கூடாது.

மேலும் புதிய பரிமாணத்தில் தமக்கேற்ற வகையில் கணியத் தொழில்நுட்பத்தை விரிவாக்கும் வண்ணம் இந்த மொழிப் பயன்பாடு கணியத்தில் வடிவமைக்கப்பட்டால் தொழில்நுட்ப வளர்ச்சியில் மேலை நாடுகளைத் தாண்டி முன்னேற முடியும்.

மேலே கூறிய மூன்று தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றுமாறு ஆங்கிலம் சாரா மொழிகளைக் கணியத்தில் பயன்படுத்துவதற்கு என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொள்வது முதன்மையான தேவையாகும்.

அத்தகைய ஒரு திட்டமிட்ட கோட்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளே ஆங்கிலம் சாரா மொழிகளைக் கணியத்தில் பயன்படுத்துவதில் வெற்றியையும் முழுமையான பலனையும் தந்து அம்மொழிச் சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.

கணியப் பயன்பாட்டில் - மொழித்தளம்

இந்த வகையில் திட்டமிடுகையில் கணியத்தில் மொழியின் பயன்பாட்டை இருவகையில் நோக்கலாம்.

1. கணியச் செயற்பாடுகளில் மொழி.
2.கணியத் தகவல் தொடர்பில் மொழி

கணியச் செயற்பாடுகளில் மொழி என்பதைப் பொறுத்தவரை நாம் விரும்பியவாறு மெல்லியங்களை உருவாக்கிக் கொண்டும் மாற்றி அமைத்துக் கொண்டும் பயன்படுத்தலாம்.

மின்னஞ்சல், இணையத்தளம் போன்ற கணியத் தகவல் தொடர்பில் மொழி என்ற பலமுனைப் பயன்பாட்டில் தமிழைப் பயன்படுத்தும் போது நாம் விரும்பியவாறு மொழியைப் பயன்படுத்த முடியாமல் போகிறது; இத்தகவல் தொடர்பு வெற்றிகரமாக அமையப் பலமுனைப் பயன்பாட்டுக்கும் இடையே உள்ள முரண்பாட்டைத் தவிர்க்கும் ஓர் மெல்லியம் அவசியமாகிறது.

மின்சுற்றுகளால் ஆக்கப்பட்டு 1,0 எனும் ஈரியல் அடிப்படையில் இயங்கும் கணியம் எனும் சுதந்திரத்தோடு பயனாளர் தொடர்பு கொள்வதற்கு வகை செய்யும் இடைமுகமாக அமையும் விண்டோஸ் போன்ற மெல்லியங்கள் இயங்குதளம் என அழைக்கப்படுகிறது,

இதேபோல் ஆங்கிலம் சாரா மொழிப் பயனாளர் கணியத்தைப் பயன்படுத்துவதற்கு அவசியமான பிரத்தியேகமான மெல்லியம் மொழித்தளம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

இந்த மொழித்தளம் என்பது எவ்வளவு தூரம் எளிமையாகவும், பயனுள்ளதாகவும் வடிவமைக்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் கணியத்தில் அம்மொழிப் பயன்பாடு வெற்றி பெறும்.

இந்த மொழித்தளம், ஆங்கில வழி வடிவமைக்கப்பட்ட எந்த மெல்லியத்தின் பயன்பாட்டையும் தாய்மொழியில் பெற முடியாது என்ற கட்டுப்பாட்டுக்கு நம்மை உள்ளாக்கும் இரும்புத் தளமாக அமைத்துவிடக் கூடாது. நம்முடைய தாய்மொழியைக் கணியத்தில் வழங்கும் எல்லா மெல்லியத்தளங்களுக்கும் அழைத்துச் சென்று பயன்பெறவல்ல இணக்கத்தளமாக அமைய வேண்டும்.

குறிப்பிட்ட சொல்லாக்க மெல்லியத்தில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய எழுத்துருக்களை யாரும் விரும்புவதில்லை. பரந்துபட்ட "பேஜ்மேக்கர்", "எம் எஸ் வோர்ட்" போன்ற பல்வேறு சொல்லாக்க மெல்லியங்களின் வசதிகளையும் பயன்படுத்துமாறு பொதுமையாக வடிவமைக்கப்பட்ட எழுத்துருக்களையே பலரும் விரும்புவது வழக்கம்.

கணியப் பயன்பாட்டில் - தமிழ் மொழித்தளம்

தமிழ் மொழித்தளச் செயற்பாடுகளைச் செய்யும் மெல்லியங்கள் பல தமிழில் வெளியாகி உள்ளன. ஆனால் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஒருங்கிணைக்குமாறு இப்பயன்பாடுகள் யாவும் ஒரே மெல்லியமாக உருவாக்கப்படவில்லை. இதற்கு மொழித்தளம் பற்றிய கோட்பாட்டு ரீதியான புரிதல் இல்லாமை ஒரு முதன்மையான காரணமாகும்.

தமிழ் மொழித்தளம் - வரியுருமா

இந்தக் குறையை நிவர்த்தி செய்யுமாறு பல்வேறு மெல்லியங்களிலும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழைப் பொதுமைப்படுத்தும் தமிழ் மொழித்தளம் ஒன்றைக் கணியத்தமிழ் சாஃப்ட்வேர் நிறுவனம் 'வரியுருமா' என்ற பெயரில் வடிவமைத்துள்ளது.

ஆங்கிலம் சாரா மொழியில் கணியத்தைப் பயன்படுத்துவோர் கணியம் மற்றும் தமக்கு வேண்டிய விண்டோஸ் இயங்குதளம் முதலான மெல்லியங்களோடு மொழித்தளம் எனும் மெல்லியத்தையும் வைத்திருப்பது அவசியமாகும்.தமிழ் மொழியைக் கணியத்தில் பயன்படுத்துவதற்கு உதவும் ஒரு தமிழ் மொழித்தளமே வரியுருமா எனும் மெல்லியமாகும்.

இயங்குதளம் - மொழித்தளம் - யுனிக்கோட் - வரியுருமா

இதுவரை வந்த இயங்குதளங்கள் கணியத்தில் ஆங்கிலம் சாரா மொழிகளைப் பயன்படுத்துவதற்கு வேண்டிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தரவில்லை.
விண்டோஸ் எக்ஸ்.பி பதிப்பிலும் அதற்குப் பிந்திய பதிப்புகள்லும் இக்குறை ஒரளவு களையப்பட்டுள்ளது எனலாம். அதாவது யுனிக்கோட் எனும் உலகத்தரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆங்கிலம் சாரா மொழிகளுக்கு இதுவரை இருந்து வந்த குறை களையப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் மொழியைப் பொருத்தவரை இக்குறை முழுமையாகக் களையப்படவில்லை. ஏனெனில் யுனிக்கோட் முறையில் தமிழ் மொழிக்கென ஒதுங்கிய இடங்களின் எண்ணிக்கை தேவையான எண்ணிக்கையிலும் குறைவானதாகவே உள்ளது.

எனவே யுனிக்கோட் முறையில் தமிழைப் பயன்படுத்துவதில் உள்ள இடக்குறையை தொழில்நுட்பத்தின் உதவியால் தாண்டுவதற்கு வரியுருமா வழிகாட்டுகிறது.

மேலும் தமிழில் பயன்படுத்தப்படும் பல்வேறு தரங்களையும் எளிதில் யுனிக்கோட் எனும் உலகத் தரத்திற்கு மாற்றிப்பயன்படுத்தவும் வரியுருமா வழிகாட்டுகிறது.

எத்தனை மாறுப்பட்ட தரங்கள் வந்தாலும் கவலை இல்லை. வரியுருமா மட்டும் இருந்தால் போதும் எல்லா தரங்களையும் எளிதில் ஒருங்கிணைத்து உலகத்தரத்தோடு இயைபுறுத்தி விடலாம்.

 


© 2005 Kaniyatamil Software