வரியுருமா சிறப்பம்சங்கள்


வரியுருமாவில் மூன்று செயற்பாட்டியங்களும் ஒரு செயல்படுத்தலியமும் ஒரு சொன்னிகழ் மெல்லியமும் உள்ளன. மேலும் சிறப்பு இணைப்பாக பல எழுத்துருக்களும் வழங்கப்படுகின்றன.

செயற்பாட்டியங்கள்

பார்க்கா

மாற்றா
  கடிதா
செயல்படுத்தலியம்

சேர்க்கா
சொன்னிகழ் மெல்லியம்

வடிவா

பார்க்கா

படிக்க முடியாத வடிவில் கணித்திரையில் தோன்றும் தமிழ் இயலை படிப்பதற்கு ஏற்றவாறு மாற்றித் தருகிறது பார்க்கா. அதாவது, இயல் வழங்கும் எழுத்துரு இல்லாமலே அந்த இயலைப் படிப்பதற்கு ஏற்ற வடிவில் மாற்றி வெளிப்படுத்துகிறது.

  • எழுத்துருவைக் கண்டறியும் வேகத்தையும், துல்லியத்தையும் பயன்பாட்டாளரே நிர்ணயித்துக் கொள்ளலாம். வேகம் அதிகமானால் துல்லியம் குறைவாகவும், துல்லியம் அதிகமானால் வேகம் குறைவாகவும் அமையும்.
  • இரண்டாம் செய்முறையில் இயல் அறியப்பட்டாலும், தொடர்ந்து சொடுக்குவதன் மூலம் இயலை நீங்கள் விரும்பும் வேறு எழுத்துருக்களில் பெறலாம்.
  • கணியத்தில் இல்லாத எழுத்துருவில் இயல் அறியப்படும்போது யுனிக்கோட் சீருருவில் படிக்குமாறு வெளிப்படுத்தப்படும். அவ்வாறு தோன்றும் இயலை வேறு எழுத்துருவிற்கு மாற்ற விரும்பினால் ‘மாற்றா’வைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றா

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட, எழுத்துருக்களைக் கொண்டு, உருவாக்கப்பட்ட இயலை நாம் விரும்பும் வேறு பல எழுத்துருக்களுக்கு மாற்றித் தருகிறது மாற்றா.

ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருவில் உருவாக்கப்பட்ட இயலையும் விரும்பிய எழுத்துருவிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

கடிதா

பல்வேறு சீருருக்களையும் பயன்படுத்தி யுனிக்கோட் வடிவில், மின்னஞ்சல் செய்வதற்கு வேண்டியவாறு, இயலை இங்கு தட்டச்சு செய்து கொள்ளலாம். தட்டச்சு செய்வதற்கு நாம் விரும்பிய விசைக்கோலத்தை தேர்ந்தெடுத்து அல்லது சேர்க்கா மூலம் நாமே வடிவமைத்து பயன்படுத்தலாம்.

  • தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் தட்டச்சு செய்யும் போது மொழிஎனும் தேர்வினை சொடுக்கி தட்டச்சு செய்யலாம். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போது விசைக்காட்சி முழுவதும் மறைக்கப்பட்டு கடிதாவின் சிறப்பு ஆழிகளைப் பற்றிய விளக்கக் குறிப்புகள் தோன்றும்.
  • விசைக் காட்சி என்பது, ஒவ்வொரு விசைக்கும் குறிப்பிட்ட விசைக்கோலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தமிழ் எழுத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தமிழ் எழுத்துகள் ஆகியவற்றின் காட்சி ஆகும்.
  • விசைக்கோலப் பட்டியலில் வரியுருமாவுடன் வழங்கப்படும் விசைக்கோலங்களும், பயன்பாட்டாளர் சேர்க்கா மூலம் வடிவமைத்த விசைக்கோலங்களும் காட்டப்படும். இதில் விரும்பிய விசைக்கோலத்தை பயன்பாட்டாளர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
  • எழுத்துருப்பட்டியலில் கணியத்தில் உள்ள எல்லா தமிழ் யுனிகோட் சீருருக்களும் காட்டப்படும். இதில் தேவையான சீருருவைத் தேர்ந்து பயன்பாட்டாளர் தட்டச்சு செய்துக் கொள்ளலாம்.
  • நிகழ் பயனகம் என்ற ஆழியைச் சொடுக்குவதன் மூலம் கடிதாவில் தட்டச்சு செய்யப்பட்ட இயலைத் தற்காலிகமாக(அடுத்த பிரதி ஆணை வரை) பிரதி செய்து கொள்ளலாம். இவ்வாறு பிரதி செய்யப்பட்ட இயலை தேவையான இடத்தில் எலியத்தில் வலச் சொடுக்கம் செய்து ஒட்டிக் கொள்ளலாம். இந்த நிகழ் பயனகம் மின்னஞ்சல், மின்னாடல் போன்றவற்றிற்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் பயனைத் தரும்.
  • அடிக்கடி பயன்படும் குறிப்பிட்ட சொற்றொடர்கள், சொற்கள் போன்றவற்றை மிகு பயனகத்தில் சேமித்துக் கொள்ளலாம். தேவையான போது அவற்றிக்குரிய நேர்விசைகள் மூலம் எளிய முறையில் பெற்று, பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • சீருருவில் உருவாக்கப்பட்டிருக்கும் இயல்களில் உள்ள சொற்களை அகர வரிசைப்படுத்திக் கொள்ள முடியும்.

சேர்க்கா

பயன்பாட்டாளர் விரும்பும் எழுத்துருவையும் விசைக்கோல ஒழுங்கையும் வரியுருமாவில் இணைக்க வழி செய்கிறது சேர்க்கா.

 

விசை சேர்க்கா

புதிய விசைக்கோல ஒழுங்குகளைப் பயன்பாட்டாளரே வடிவமைக்க வழிகாட்டுகிறத

எழுத்துரு சேர்க்கா

வரியுருமாவில் இணைக்கப்படாத எழுத்துருக்களை இணைக்க பயன்படுகிறது.


வடிவா

வடிவா இயல்களை உருவாக்கவும், வடிவமைக்கவும், சேமிக்கவும் மற்றும் அச்சிடவும் வல்ல சொன்னிகழ் மெல்லியம் ஆகும்.

விசைக் கோலத் தேர்வு, விசைக் கோல வடிவமைப்பு, விரும்பிய விசைக் கோலத்தில் எல்லா எழுத்துருக்ககளிலும் தட்டச்சு செய்யும் வசதி போன்ற பிற தமிழ்ச் சொன்னிகழ் மெல்லியங்களில் இல்லாத சிறப்புகளைக் கொண்டிருக்கிறது வடிவா.
  • நீங்கள் விரும்பியபடி இயல்களை எந்த விசைக்கோலத்திலும், எந்த எழுத்துருவிலும் தட்டச்சு செய்து வடிவமைத்து, சேமித்து மற்றும் அச்சிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • வடிவாவின் சிறப்பு அம்சமாக தட்டச்சு செய்யப்படும் இயலை வலச் சொடுக்கம் செய்து 'உருமாற்று' (convert to) என்ற தேர்வின் மூலம் விரும்பிய எழுத்துருவிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
  • தட்டச்சு செய்த இயல்களை PDF வடிவில் சேமித்துக் கொள்ள முடியும்.

வரியுருமா யாருக்குப் பயன்படும் ?


1. இதழியல் துறையில்....
 

பத்திரிகை நிறுவனங்கள் தங்களுக்கு வரும் தட்டச்சு செய்த படைப்புகளை இன்னொரு முறை தாங்கள் பயன்படுத்தும் எழுத்துருவில் தட்டச்சு செய்து வடிவமைக்க வேண்டிய நிலை இன்று காணப்படுகிறது.

வரியுருமா இருந்தால் எந்த ஒரு எழுத்துருவிலேனும் ஒரு முறை தட்டச்சு செய்யப்பட்ட தகவலை மீண்டும் தட்டச்சு செய்யாமலே தாங்கள் விரும்பும் எழுத்துருவில் மாற்றி வடிவமைப்பதோடு அச்சிடவும் செய்யலாம்.
இதனால் இதழியல் துறையில் வரியுருமா தட்டச்சுப் பணியை வெகுவாகக் குறைக்கும் பயன்மிக்க ஒரு மெல்லியமாக விளங்குகிறது.

 
2. மின்னஞ்சல் தொடர்புத்துறையில்....
  மின்னஞ்சல் மூலம் தமிழில் தொடர்பு கொள்ளும் நிறுவனங்களும் தனிநபர்களும் தம்மிடம் இல்லாத எழுத்துருவில் அனுப்பப்படும் அஞ்சல்கள் யாவற்றையும் சிரமமின்றிப் படிக்கவும், மாற்றி வடிவமைக்கவும் வரியுருமா வழி செய்கிறது. இணையத்தளங்களில் உள்ள செய்திகளையும் இதுபோல் படித்தறியலாம்.
 
3. கணியத்தில் தமிழைத் தட்டச்சு செய்யும் இடங்களில்...
  தாங்கள் விரும்பிய அல்லது தங்களுக்குப் பரிச்சயமான விசைப்பலகை ஒழுங்கில் எல்லா எழுத்துருக்களையும் தட்டச்சு செய்யலாம் என்பதால் தமிழில் தட்டச்சு செய்வதற்கு இதை விட எளிமையாக வழிக்காட்டும் மெல்லியம் எதுவும் இல்லை என உறுதியாகக் கூறலாம்.

ஏதேனும் ஒரு விசைப்பலகை ஒழுங்கில் தட்டச்சு செய்யப் பழகியவர் (அது ஆங்கிலத் தட்டச்சுப் பழக்கமாகக் கூட இருக்கலாம்) அதையே பயன்படுத்தி தமிழையும் தட்டச்சு செய்யலாம். வரியுருமா இருந்தால் தமிழுக்கெனப் பிரத்தியேகமான தட்டச்சாளரைத் தேடி அலையத் தேவையில்லை!
 
4. அயல் நாட்டுத் தமிழர் மற்றும் தமிழ் கற்கும் பிறமொழியாளர்
  ஆங்கில மொழிக்குரிய ரோமானிய அகர வரிசையைப் பயன்படுத்தி தமிழைத் தட்டச்சு செய்வதற்குச் சில மெல்லியங்கள் தோன்றியுள்ளன. ஆனால் இவற்றில் எல்லாம் அவர்கள் வழங்கிய விசைப்பலகை ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயத் திணிப்பு உண்டு.

ஆனால் வரியுருமா மூலம் ஒருவர் தான் விரும்பியவாறு ஆங்கில அகர வரிசையில் விசைப்பலகையை வடிவமைத்து தமிழைத் தட்டச்சு செய்யலாம். அவ்வாறு தட்டச்சு செய்கையில் அவர் பயன்படுத்தும் விசை ஒழுங்கு (Keyset Order) கணித்திரையில் தோன்றி தட்டச்சுப் பணியை இன்னும் எளிதாக்குகிறது.

வரியுருமா மெல்லியத்தைப் பயன்பாட்டாளர் விரும்பியவாறு தமிழ் அல்லது ஆங்கிலமொழி மூலம் இயக்கலாம் என்ற பயன்பாட்டு மொழித் தேர்வும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழைப் பேச மட்டும் தெரிந்த தமிழரும், தமிழ் கற்க விரும்பும் பிற மொழியாளரும் வரியுருமாவை விரும்பிப் பயன்படுத்துவர்.
 
5. கல்வித்துறையில்....
  கணியத்தை இயக்கக் கற்றுக் கொள்ளும் தமிழருக்கு ஆங்கிலம் பற்றிய அச்சம் இல்லாமல் நேரடியாகத் தமிழ் மூலம் கணியத்தை இயக்கும் பயிற்சியை அளிப்பதற்கு வரியுருமாவைப் பயன்படுத்தலாம்.

இதனால் தமிழ் மூலம் கணியப் பயிற்சியை அறிமுகப்படுத்தும் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வரியுருமா மிகுந்த பயன் அளிக்கும் மெல்லியங்களில் ஒன்றாக விளங்குகிறது.
 
6. கணியத்துறையில்....
  தமிழில் இணையத் தளங்களை வடிவமைப்போர் யுனிக்கோட் வடிவில் பலவகையான சீருருக்களைப் பயன்படுத்தி இணையத் தளங்களை வடிவமைக்குமாறு HTML வகை சேமிப்பு வசதியுடன் வரியுருமா அமைந்துள்ளது.

தமிழில் மெல்லியங்கள் தயாரிப்போர் எழுத்துருச் சிக்கல் இல்லாமல் மெல்லியங்களைப் பயன்படுத்துமாறு வடிவமைப்பதற்கு வரியுருமாவுடன் இயைபுறத் தமது மெல்லியங்களை வடிவமைப்பதே சிறந்த வழி ஆகும்.
 



© 2005 Kaniyatamil Software