http://bhashaindia.com - வரியுருமா


bhashaindia

தமிழ்க்கணினி பயன்பாட்டுச் சிக்கலைத் தீர்க்க தமிழ்எழுத்துருக்ககள் அனைத்தையும் இணைத்து இயங்குதளம் போல் செயல்படக் கூடிய ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்ற முயற்சியின் சிறப்பு தான் கணியத்தமிழ் சாஃப்ட்வேர் மைய நிறுவனத்தின் வரியுருமா மொழித்தளம் அமைப்பாகும்.

இந்த மொழித்தளம் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, ஆங்கிலம்சாராத அனைத்து உலக மொழிகளுக்கும் பயன்படக் கூடிய ஒன்றாகும். இத்தகைய தமிழ் மொழித்தளமே வரியுருமா சாஃப்ட்வேராகும்.. வரியுருமாவில் ஓருலா, பார்க்கா, சேர்க்கா, மாற்றா, கடிதா, வடிவா ஆகிய அப்ளிகேஷன்கள் ஒரே தொகுப்பாக உள்ளன.

'வடிவா' சொல்தொகுப்பு வடிவமைப்பு மென்பொருளாகும். வேர்ட்ப்ராசசர் வடிவிலுள்ள இதில் டெக்ஸ்ட்டுகளை உருவாக்கவும், சேமிக்கவும், அச்சிடவும் பயன்படுகிறது.

உலகின் எந்தமூலையில் இருப்பவரும் தமிழில் ஈமெயிலை அனுப்பினால் அவர் தட்டச்சு செய்த எழுத்துரு நம்மிடம் இல்லாவிட்டால் அதைப் படிக்க முடியாது. இதுபோன்ற சிக்கலைத் தீர்ப்பதற்குத்தான் 'பார்க்கா' இதில் அனுப்பியவரின் எழுத்துரு நம்மிடம் இல்லாவிட்டாலும் அவற்றைப் 'பார்க்கா' வில் படித்து விடலாம்.

தமிழ் மென்பொருட்களில் மட்டுமல்ல, ஆங்கில மொழியில் உருவான மென்பொருட்களிலும் தமிழைப் பயன்படுத்த உருவானதுதான் 'ஓருலா' ஆகும்.

நாம் பழகிய விசைப்பலகையை தேர்ந்தெடுத்து யுனிகோடில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் அனுப்ப 'கடிதா' என்ற வரியுருமா அப்ளிகேஷன் பயன்படுகிறது.

பிற நிறுவனங்கள் தயாரித்த எழுத்துரு விசைமுறை, பிற விசைப்லகையை மாற்றி இணைத்துக் கொள்ளவும், நாம் விரும்பியவாறு விசைப்பலகை ஒன்றை வடிவமைத்துக் கொள்ளவும் பயன்படும் அப்ளிகேஷன் 'சேர்க்கா' ஆகும்.

அமுதம் என்ற எழுத்துருவில் தட்டச்சு செய்து வைத்தள்ளதை பிற நிறுவன எழுத்துருவிற்கு மாற்றிப் பயன்படுத்த விரும்பினால் மாறாது. ஏனென்றால் இரண்டு எழுத்துருக்களுக்குமே வெவ்வேறு உள்ளீட்டுவடிவத்தில் உருவானவதாகும். இச்சிக்கலைத் தீர்ப்பதே மாற்றா அப்ளிகேஷனின் சிறப்பம்சமாகும். யுனிகோட் மற்றும் எந்த விசைப்பலகையின் எழுத்துருவுக்கும் மாற்றாவின் மூலமாக எளிதில் மாற்றலாம்.

 


© 2006 Kaniyatamil Software